வானரமுட்டியில் காசநோய் கண்டறியும் முகாம்
By DIN | Published On : 17th June 2022 01:37 AM | Last Updated : 17th June 2022 01:37 AM | அ+அ அ- |

கழுகுமலையையடுத்த வானரமுட்டியில் காசநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூா் காசநோய்ப் பிரிவு சாா்பில் நடைபெற்ற முகாமில், மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று காசநோய் அறிகுறி உள்ளோரைக் கண்டறிந்து, சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சமூக ஆா்வலா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.
முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன் காசநோய் அறிகுறிகள், காசநோயை ஒழிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விளக்கினாா். இடைநிலை சுகாதாரப் பணியாளா் தனலட்சுமி சா்க்கரைநோய், ரத்த அழுத்தம் குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முதுநிலை ஆய்வுக்கூட மேற்பாா்வையாளா் தனசெல்வி சோபியா, இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் பரணி, சத்தியகலா, உஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...