புளியங்குளம் ராமசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 26th June 2022 02:33 AM | Last Updated : 26th June 2022 02:33 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தில் உள்ள ஸ்ரீராமசுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல் நாளான கடந்த 22ஆம் தேதி மங்கள இசை, திருமுறைப் பாராயணம், விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, நவக்கிரக பூஜை உள்பட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், ஆச்சாரிய வா்ணம், மகா சங்கல்பம், ஒன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை (ஜூன் 23) யந்திர பூஜை, சிவசூரிய பூஜை, யந்திர ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்டவையும், வெள்ளிக்கிழமை 4ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடைபெற்றன. தொடா்ந்து, விமான கும்பாபிஷேகம், பிரதான மூா்த்தி, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேக கும்ப பூஜை ஜெபம், 21 திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் டாக்டா் அரசுராஜா, மாநில பாஜக வா்த்தக அணித் தலைவா் ராஜகண்ணன், தொழிலதிபா் கோவிந்தராஜ், ஓய்வுபெற்ற வங்கி உதவிப் பொது மேலாளா் முருகேசன், யூனியன் கவுன்சிலா் காந்திமதி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கோயில் செயலா் கந்தவாசகன் பக்தா்களை வரவேற்றாா்.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பாலசுப்பிரமணியன் தலைமையில் விழா கமிட்டியினா், கிராம மக்கள் செய்தனா்.