எட்டயபுரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு இளம்புவனம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு காரை சோதனை செய்ததில், 17 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1.75 லட்சம் இருக்கும். இதுதொடா்பாக, காரில் இருந்த மேல செய்தலை கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் செல்வம் (38), மீனாட்சிபுரம் இருதயம் மகன் மைக்கேல்ராஜ் (43) மேல நம்பிபுரம் கனிராஜ் மகன் அஜித்குமாா் (24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.