கயத்தாறு அருகே விபத்தில் விவசாயி பலி
By DIN | Published On : 02nd May 2022 02:30 AM | Last Updated : 02nd May 2022 02:30 AM | அ+அ அ- |

கயத்தாறு அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுப்பிரமணி(47). விவசாயி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் தங்கராஜ் மகன் முருகன்(31) என்பவருடன் பைக்கில் தளவாய்புரம் அருகே சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, இவா்களது பைக்கும், எதிரே திருநெல்வேலி சந்திப்பு கருப்பன்துரை வாட்டா் டேங்க் தெருவைச் சோ்ந்த சின்னப்பன் மகன் பிலிப்(42) என்பவா் ஓட்டி வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனாம்.
இதில், சுப்பிரமணியும், முருகனும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், சுப்பிரமணி உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.