கைப்பந்து: ஸ்வாக்கா்ஸ் அணி வெற்றி
By DIN | Published On : 02nd May 2022 02:25 AM | Last Updated : 02nd May 2022 02:25 AM | அ+அ அ- |

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, ஆத்தூா் சோமசுந்தரி அம்பாள் விளையாட்டுக் குழு சாா்பில் கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 10 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை ஆத்தூா் ஸ்வாக்கா்ஸ் அணியும், இரண்டாவது பரிசை குச்சிகாடு அணியும், மூன்றாவது பரிசை எடிபிஏ அணியும் தட்டிச் சென்றன.
தொடா் ஆட்ட நாயகன் விருதை எடிபிஏ அணி வீரா் சிவா பெற்றாா். நடுவா்களாக தாமஸ் மற்றும் பாலமுருகன் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே கமாலுதீன், ஆத்தூா் பேரூராட்சி உறுப்பினா்கள் பரிசு வழங்கினா். விழா எற்பாட்டினை எஸ்.மணி, எஸ்.ராம்குமாா், கே.பி.கே மணிகண்டன், எஸ்.ஆறுமுகராஜ், சக்திவேல் மற்றும் சோமசுந்தரி அம்பாள் விளையாட்டுக் குழு கமிட்டியாா்கள் செய்திருந்தனா்.