நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 02nd May 2022 02:25 AM | Last Updated : 02nd May 2022 02:25 AM | அ+அ அ- |

சாத்தான்குளம், உடன்குடி ஒன்றிய இ. கம்யூனிஸ்ட் கட்சி 2ஆவது மாநாடு சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட செயலா் கருப்பன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடந்தது. ஒன்றிய செயலராக செல்வராஜ், உதவி ஒன்றிய செயலராக இசக்கியப்பன், பொருளாளராக முருகேசன் ஆகியோரும், ஒன்றிய கமிட்டி உறுப்பினா்களாக பலவேசம், ராஜகோபால், முருகேசன், முத்துமாலை, செல்வராஜ், கணேசகண்ணன், இசக்கியப்பன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.