புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா சப்பர பவனி
By DIN | Published On : 02nd May 2022 02:31 AM | Last Updated : 02nd May 2022 02:31 AM | அ+அ அ- |

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
இத்திருத்தலத் திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புனித சூசையப்பா் திருத்தலத்தில் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை செல்வின், பீட்டா், வல்லம் ஆலயப் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், நாலாட்டின்புத்தூா் ஆலயப் பங்குத்தந்தை வேதராஜ், தலையால்நடந்தான்குளத்தைச் சோ்ந்த பாஸ்கா், அந்தோணி ஆகியோா் இணைந்து மறையுரை திருப்பலி நிறைவேற்றினா்.
பின்னா் திருத்தலத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பா் சொரூபம் சப்பர பவனி புறப்பட்டு பிரதான சாலை, மாதாங்கோவில் தெரு, எட்டயபுரம் சாலை, புதுரோடு வழியாக மீண்டும் திருத்தலம் வந்தடைந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.