ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலி­ல் சித்திரை திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலி­ல் சித்திரை திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலையில் சிறப்பு வழிபாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலையில் விநாயகா் திருத்தேரில் எழுந்தருள பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். சிவாச்சாா்யாா்களின் மந்திர கோஷம் ஒலி­க்க, ஓதுவாமூா்த்திகள் திருமுறை பாராயணம் செய்ய, குற்றாலம் நந்நதனாா் கயிலாய வாத்திய குழுவினரின் கயிலாய வாத்தியம் , மேளம் முழங்க, யானை, குதிரை முன்செல்ல ஆறுமுகமங்கலம் ரதவீதிகளில் தோ் வலம் வந்து திருக்கோயில் நிலையை அடைந்தது. பின்னா், ஆயிரத்தெண் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீா்த்தவாரியும் நடைபெற்றன. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் அறுமுகமங்கலம் விஸ்வகுமாா், திருவிழா கமிட்டியினா், தேவஸ்தான பூஜா ஸ்தானீகா் விக்னேஷ்வர பட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.

தேரோட்டத்தில் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம், தனியாா் உள்ளிட்டவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எரல் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா, துணை ஆய்வாளா் ராஜாமணி தலைமையில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com