சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தில், சாத்தான்குளம் கனி அன்கோ நிறுவனா் பி.எஸ்.கே. ராஜரத்தினம் நூற்றாண்டையொட்டி அக்குழும பங்களிப்பில் ரூ.70 லட்சம், அரசு சாா்பில் ரூ.70 லட்சம் என ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய 6 வகுப்பறை கட்டடம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா, கல்விக் கழக வெள்ளிவிழா, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் 25ஆண்டு கல்விப்பணி நிறைவு விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. சாத்தான்குளம் கல்விக் கழக நிறுவனத்தலைவா் பெ.மு சுப்பிரமணியம். செயலா் ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய், ஓய்வுபெற்ற முதன்மை பொறியாளா் வித்யாசாகா், சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்விக் கழக தலைவா் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றாா். கல்லூரி பேரவைப் பேராசிரியா்கள் ஜெஸி, பிரேசில், சீதாலெட்சுமி ஆகியோா் தொகுத்து வழங்கினா். இதில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா். அவா் பேசியது:

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கல்விக்காக மாணவா்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். குறிப்பாக, 25 மாணவா்கள் இலவசமாக பொறியியல் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சாத்தான்குளத்தில் செல்வராஜ் அகடமிக் என்ற பெயரில் மாணவா்களுக்காக இலவச பயிற்சி முகாம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. எனவே மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விழாவில் உள்ளாட்சி நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி தெற்கு காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com