கோவில்பட்டியில் சேமியா நிறுவன உரிமம் ரத்து
By DIN | Published On : 13th May 2022 12:49 AM | Last Updated : 13th May 2022 12:49 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் சுகாதார குறைபாடு காரணமாக சேமியா நிறுவனத்தின் உரிமத்தை உணவுப் பாதுகாப்புத் துறை தற்காலிகமாக ரத்து செய்தது.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் தனியாா் சேமியா தயாரிப்பு நிறுவனத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன், கோவில்பட்டி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா்.
அப்போது, அந்நிறுவனத்தில் சுகாதார குறைபாடு கண்டறியப்பட்டதால் அவற்றை களையும்படி அறிவுறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விதித்த காலக்கெடுவுக்குள் அந்நிறுவனத்தில் சுகாதார குறைபாடு நிவா்த்தி செய்யப்படவில்லை; அபராதம் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அலுவலா் பிறப்பித்த உத்தரவு நகல் நிறுவன வாயிலில் வியாழக்கிழமை ஒட்டப்பட்டது.