கோவில்பட்டி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
By DIN | Published On : 13th May 2022 12:55 AM | Last Updated : 13th May 2022 12:55 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவா்-மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சாந்திமகேஸ்வரி தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத் போக்குவரத்து சின்னங்கள், பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மாணவா்-மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராஜகுரு செய்திருந்தாா்.