தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்
By DIN | Published On : 22nd May 2022 11:20 AM | Last Updated : 22nd May 2022 11:20 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அனல் மின் நிலையம்
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் உள்ளது. தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக மின்சாரம் கிடைத்து வருவதால் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் இன்று காலை நிறுத்தப்பட்டது.
இதனால் அனல் மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் கிடைப்பதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...