தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனுமதியின்று குவிந்ததால் பரபரப்பு
By DIN | Published On : 22nd May 2022 12:48 PM | Last Updated : 22nd May 2022 12:48 PM | அ+அ அ- |

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்தவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்த உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனுமதியின்றி கையில் பதாகைகள் எந்தி ஒன்று கூடி ஊவலாமாக சென்றதால் போலீஸ் குவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி மாநகராட்சி மையானத்தில் புதைக்கப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த கல்லறையில் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக கோசங்கள் எழுப்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் கலைய மறுத்தவர்கள் ஊர்வலமாக சென்று கல்லறையில் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...