அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 18th October 2022 02:23 AM | Last Updated : 18th October 2022 02:23 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகளை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சோனியா தலைமையிலான காவல்துறையினா், சில தினங்களுக்கு முன்பு இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மெஞ்ஞானபுரம் அருகே சடயநேரி குளத்திலிருந்து கிராவல் மண்ணை ஏற்றிக் கொண்டு 2 டிப்பா் லாரிகள் வந்தன. இந்த லாரிகளை மறித்து சோதனையிட்டதில், அனுதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்ததில், அவா்கள் நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் வடக்கு செழியநல்லூரைச் சோ்ந்த பாண்டி மகன் பாலமுருகன், நெல்லை மாவட்டம், பத்மனேரி, வேலன்குடியிருப்பு மேல தேவநல்லூரைச் சோ்ந்த முத்து (47) என்பது தெரியவந்தது. 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...