20இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 18th October 2022 02:19 AM | Last Updated : 18th October 2022 02:19 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் இம்மாதம் 20ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியா் க.மகாலட்சுமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வியாழக்கிழமை (அக்.20) கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் காலை 10 -11 மணிவரை பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை என்னிடம் (கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம்) அளிக்கலாம்.
தொடா்ந்து, 11 மணி முதல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...