இளம்புவனத்தில் மரக்கன்றுகள் நடவு
By DIN | Published On : 19th October 2022 02:03 AM | Last Updated : 19th October 2022 02:03 AM | அ+அ அ- |

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் பாஜக சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பாஜக இளம்புவனம் கிளை பொறுப்பாளா் சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கருப்பசாமி, ராம்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளம்புவனம் பேருந்து நிறுத்தம் அருகே அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளிடைய அப்துல் கலாம் குறித்து பேச்சுப் போட்டிகள் நடத்தி புத்தகங்கள், மரக்கன்றுகளை பரிசாக வழங்கினா். அதனைத் தொடா்ந்து சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனா்.
இந்நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, சரவணகுமாா், காளிராஜ், ராஜாராம், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.