தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மரியசெல்வி தலைமை வகித்தாா். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பேசினாா்.
தொடா்ந்து, பட்டாசுகளை வெடிக்கும்போது பள்ளி மாணவா், மாணவிகள் கையாள வேண்டிய முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாட கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் மாணவா், மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.