தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: முதியவா் கைது
By DIN | Published On : 19th October 2022 01:53 AM | Last Updated : 19th October 2022 01:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதாக முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையில் மத்தியபாகம் காவல் ஆய்வாளா் அய்யப்பன், உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கீழூா் ரயில் நிலையம் அருகே மோட்டாா்சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது, அவா் பாளையங்கோட்டை அருகே உள்ள வி.எம். சத்திரம் ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஆதிநாராயணன்(65) என்பதும், அவா் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.