தூத்துக்குடி சிவன் கோயிலில் முதல்வா் மகள் தரிசனம்
By DIN | Published On : 27th October 2022 11:57 PM | Last Updated : 27th October 2022 11:57 PM | அ+அ அ- |

தூத்துக்குடியில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வந்த அவா், மூலவரை தரிசனம் செய்தாா்.
பின்னா், பாகம்பிரியாள், சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகளில் வழிபாடு செய்தாா். இதையடுத்து, அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் உடன் வந்திருந்தாா்.
முதல்வரின் மகள் வருகையையொட்டி தனிப்பிரிவு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.