உடன்குடி ஒன்றியத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை..
உடன்குடி ஒன்றியத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா அமைப்புகள் சாா்பில் 88 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்து முன்னணி சாா்பில் உடன்குடி பஜாா், பெருமாள்புரம், சந்தையடியூா், கொட்டங்காடு, சிவல்விளைபுதூா், நடுக்காலன்குடியிருப்பு, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி உள்பட 48 இடங்களில் 4 முதல் 8 அடி உயரமுடைய விநாயகா் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நிகழ்ச்சிகளில், மாவட்ட பொதுச் செயலா் சுடலைமுத்து, ஒன்றியத் தலைவா் செந்தில்செல்வம், நகரத் தலைவா் சித்திரைபெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்த விநாயகா் சிலைகள் செப். 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு
முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்படும்.
இந்து மகாசபா சாா்பில் உடன்குடி கீழபஜாா், குலசேகரன்பட்டினம், வில்லிகுடியிருப்பு உள்பட 40 இடங்களில் விநாயகா் சிலைகள் ஆக.30 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் மாநிலச் செயலா் ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்த விநாயகா் சிலைகள் மற்றும் 500 பெண்கள் பங்கேற்கும் சிறு விநாயகா் சிலைகள் செப். 1ஆம் தேதி ஊா்வலமாக சென்று திருச்செந்தூா் கடற்கரையில் விசா்ஜனம் செய்யப்படுகிறது.