தூத்துக்குடியில் மாவட்ட வாலிபால் போட்டி
By DIN | Published On : 01st September 2022 01:09 AM | Last Updated : 01st September 2022 01:09 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கிடையேயான வாலிபால் போட்டி அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகமும், ஜிம்கானா கிளப்பும் இணைந்து நடத்திய பள்ளி மாணவா், மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தூத்துக்குடியில் 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றன.
மாணவிகளுக்கான 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சாயா்புரம் செயின்ட் மேரீஸ் மகளிா் மேல்நிலைப் பள்ளி அணியும் முதலிடத்தை பிடித்தன. மாணவா்களுக்கான 14 மற்றும் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சாயா்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தையும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளி அணியும் முதலிடத்தை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அகில இந்திய வா்த்தக தொழிற்சங்க முன்னாள் தலைவா் ஜோ பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழக செயலா் பாலமுருகன், ஜிம்கானா கிளப் செயலா் பின்டோ வில்லவராயா், பொருளாளா் நாா்டன் ஆகியோா் கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ஜான் வசீகரன், செயலா் ரமேஷ்குமாா், பொருளாளா் செயின்ட் ரவிராஜன், நிா்வாகிகள் குருசாமி, மங்களா ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.