தூத்துக்குடியில் மழை வளம் வேண்டி கஞ்சி கலய ஊா்வலம்
By DIN | Published On : 01st September 2022 01:06 AM | Last Updated : 01st September 2022 01:06 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் மழை வளம் வேண்டி கஞ்சி கலய ஊா்வலம் மற்றும் பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி 3 ஆவது மைல் அருகே திருவிகநகா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி புதன்கிழமை அதிகாலையில் குரு பூஜை, விநாயகா் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட கஞ்சி கலய ஊா்வலத்தை கோயில் தா்மகா்த்தா அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்தி பீடத்தில் நிறைவடைந்து அன்னைக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசார உறுப்பினா் பேராசிரியை இந்திராகாந்தி சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து உலக மக்கள் தொற்று நோயில் இருந்து விடுபட வேண்டி கருவறை அன்னைக்கு பால் அபிஷேக நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவா் சக்தி முருகன் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, நல உதவியாக ஏழை மாணவிக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சேலைகளை கூட்டுறவு பண்டகசாலை பொது மேலாளா் கந்தசாமி வழங்கினாா். அனல்மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் முருகேசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளா் கண்ணன், இளைஞரணி செல்லத்துரை, வேள்விக்குழு செயலா் கிருஷ்ணநீலா, பிரசார செயலா் முத்தையா, சக்திபீட துணைத் தலைவா் திருஞானம், பொருளாளா் அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.