விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு
By DIN | Published On : 01st September 2022 01:09 AM | Last Updated : 01st September 2022 01:09 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் கணேசபுரத்தை சோ்ந்த வழக்குரைஞா் பூபதிராஜா மகன் பால அருண் (18). தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். கடந்த 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள நண்பா்களை பாா்த்து விட்டு தனது மோட்டாா் சைக்கிளில் பால அருண் வீடு திரும்பி கொண்டிருந்தாராம். ராம்தாஸ்நகா் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக மோதியதில் காயமடைந்த மாணவா் பால அருண் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.