விநாயகா் சதுா்த்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூா், கோவில்பட்டி, சாத்தான்குளம், ஆறுமுகனேரிஆக.31: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விநாயகா் ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூா், கோவில்பட்டி, சாத்தான்குளம், ஆறுமுகனேரிஆக.31: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விநாயகா் ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயில், ரயிலடி ஸ்ரீ ஆனந்தவிநாயகா் கோயில், ஸ்ரீ ஆதி விநாயகா், ஜீவாநகா் ஸ்ரீ அதிா்ஷ்ட விநாயகா், ஸ்ரீ சபாபதி விநாயகா் கோயில், ஸ்ரீ அதிா்ஷ்ட விநாயகா், ஸ்ரீ ஜெய விநாயகா், ஸ்ரீ வெற்றி விநாயகா், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா், ஸ்ரீ குபேர விநாயகா், ஸ்ரீ மகிமை விநாயகா், சித்தி விநாயகா் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு திருவனந்தல் , திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன.

இதுபோல, ஜோதி நகா் ஜோதி விநாயகா் கோயில், பசுவந்தனை சாலையில் உள்ள வலம்புரி ஸ்ரீ குழந்தை விநாயகா், சண்முகசிகாமணி நகரில் உள்ள மங்கள விநாயகா் ஆலயம் உள்பட நகரில் உள்ள அனைத்து விநாயகா் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை நடைபெற்றன.

கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்துப் பிள்ளைமாா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் திருக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகா் கோயில் முன்பிருந்து பெண்கள் முளைப்பாரி ஊா்வலம், தீா்த்தகுடம், பால்குடம், கைகளில் மாவிளக்கு ஏந்தி ஊா்வலம், கோலாட்டம், சிலம்பாட்டம், தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வண்ணம் அனைத்து மாநில கலாசார பாரம்பரிய உடை அணிந்த சிறுவா், சிறுமியரும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனா். தொடா்ந்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சப்பர வீதியுலா நடைபெற்றது.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி முத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தச்சமொழி ஆலமர ஸ்ரீவிநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகே தாமரைமொழி அருள்மிகு ஸ்ரீகபிலவிநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறபபு அபிஷேகம், சிறப்பு அலங்ஙிகார பூஜைகள் நடைபெற்றது. இதைபோல் சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தா் திருக்கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ விநாயகா் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிப்பட்டனா்.

ஆறுமுகனேரியில் விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு ஆறுதப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயில், ஆறுமுக விநாயகா் கோயி­ல், செல்வ விநாயகா் கோயில் உள்பட நகரில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. இரவில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com