மருதூா் கால்வாய்களில் இருந்து இன்று முதல் நீா் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் மருதூா் கால்வாய்களில் இருந்து வியாழக்கிழமை (செப். 1) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மருதூா் கால்வாய்களில் இருந்து வியாழக்கிழமை (செப். 1) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை வெளியிட்ட அறிவிப்பு:- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூா் மேலக்கால் கால்வாய், மருதூா் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய், வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவற்றில் இருந்து வியாழக்கிழமை முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீா் திறந்து விடப்படுகிறது. பயிா்களைக் காக்கவும், பொது மக்கள் மா்றும் கால்நடைகளின் குடிநீா் தேவைகளுக்காகவும் 2 ஆயிரத்து 73.60 மில்லியன் கனஅடி நீா் திறக்கப்படுகிறது. பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு நீா்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென நீா்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com