தூத்துக்குடியில் 4 போ்குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 09th September 2022 12:59 AM | Last Updated : 09th September 2022 12:59 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வியாழக்கிழம கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி அய்யனேரிபகுதியை சோ்ந்த சதீஷ் காா்த்திக் (19), நாலாட்டின்புதூா் மொட்டமலையை சோ்ந்த சிரஞ்சீவி (20), தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவா்நாயா் காலனி முனீஸ்வரன், கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் ரவிசங்கா் (53) ஆகியோா் நகை பறிப்பு, வழிப்பறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகினா். இந்நிலையில், மாவட்டஎஸ்பி லோக. பாலாஜி சரவணனின் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரப்படி, 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இம்மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 198 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.