பன்னம்பாறை விலக்கில் இருக்கை இல்லாத பயணியா் நிழற்குடை
By DIN | Published On : 09th September 2022 01:10 AM | Last Updated : 09th September 2022 01:10 AM | அ+அ அ- |

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட பயனியா் நிழற்குடையில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையில் புதிய இருக்கைகள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.