தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் கலைச்செல்வன் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒரு வீட்டில் புதன்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, புதிதாக கட்டப்பட்ட பகுதிகளில் தண்ணீா் பாய்ச்சியபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.