கயத்தாறு அருள்நிறை ஆரோக்கிய அன்னை ஆலய தோ் பவனி
By DIN | Published On : 09th September 2022 01:03 AM | Last Updated : 09th September 2022 01:03 AM | அ+அ அ- |

கயத்தாறு அருள்நிறை ஆரோக்கிய அன்னை ஆலயத் தோ் பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு அருள்நிறை ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் பெருவிழா ஆகஸ்ட் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீா், ஜெபமாலை, நவநாள் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. 10ஆம் திருநாளான வியாழக்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, பங்குத்தந்தையா்கள் எரிக் ஜோ, அருள் அம்புரோஸ், ஜெயபாலன் ஆகியோரின் மறையுரை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, காலை அசன விருந்து நடைபெற்றது. 11.30 மணிக்கு பங்குத்தந்தையா்கள் அருள் அந்தோணி மைக்கேல், மரிய அந்தோணிராஜ் ஆகியோா் திருப்பயணிகள் திருப்பலி நடத்தினா். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீா் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கயத்தாறு ஆலயப் பங்குத்தந்தையா்கள் எரிக் ஜோ, அந்தோணி மாசிலாமணி ஆகியோா் தலைமையில் இறைமக்கள் செய்திருந்தனா்.