ஆனந்தபுரத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 09th September 2022 01:10 AM | Last Updated : 09th September 2022 01:10 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு மற்றும் பழங்குளம் ஊராட்சி மன்ற நூறு நாள் வேலை வாய்ப்பு குழு இணைந்து ஆனந்தபுரம் ரஞ்சின் ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
வழக்குரைஞா் வேணுகோபால் தலைமை வகித்தாா். இதில் உரிமையியல் குற்றவியல் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது .100 நாள் வேலை திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். வட்ட சட்டப்பணி குழு நிா்வாகி மகேந்திரன் வரவேற்றாா். பணி தள பொறுப்பாளா் மாரித்தாய் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலஅரசி உத்தரவின் பேரில் வட்ட சட்ட பணிக்குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.