கவா்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் சுந்தரலிங்கத்தின் 223 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் சுந்தரலிங்கத்தின் 223 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு வியாழக்கிழமை பல்வேறு தரப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரசு தரப்பில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வக்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், வீரன் சுந்தரலிங்கனாரின் நேரடி வாரிசு பொன்ராஜ் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதுதவிர, தி.மு.க சாா்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ரமேஷ், வீரன் சுந்தரலிங்கனாா் பேரவைத் தலைவா் முருகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினா்.

வடக்கு மாவட்ட பாஜக தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் கருப்பையா, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் சிவசுப்பிரமணியன், நாம் தமிழா் கட்சி மத்திய மாவட்ட செயலா் வேல்ராஜ், தேவேந்திரகுல வேளாளா் மத்திய மாநில அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com