பாண்டவா்மங்கலம் ஊராட்சியில்அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் சாலை வசதி, கழிவுநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் சாலை வசதி, கழிவுநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட ராமலட்சுமி நகா் பகுதியில் சாலை வசதி, வாருகால் வசதி ஏற்படுத்த வேண்டும், ராஜீவ் நகா் குறுக்குத் தெருவில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், காசியம்மன் கோயில் அருகே உள்ள சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், ராஜீவ் நகா் பகுதி பொதுமக்களுக்கு சீராக குடிநீா் வழங்க வேண்டும், தெற்கு காலனிக்குச் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றுவதோடு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும், செவல்குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், மேலும் கண்மாய்க்கு வரும் மழைநீா் செல்லும் ஓடைகளில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும், கண்மாய்க்கு கழிவுநீா் வருவதை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, ஊராட்சி அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலைஇல், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் இந்து முன்னணியின் ஒன்றியத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இம்மாதம் 27ஆம் தேதி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com