

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்பயிற்சி கழகம் சாா்பில் பெண்களுக்கு யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை மதுமிதா, பெண்களுக்கு யோகா கற்றுக்கொடுத்தாா். மாணவி இசக்கியம்மாள் வரவேற்றாா். மாணவி சந்திரலட்சுமி நன்றி கூறினாா். மாணவி ஷா்மிளா ஜெனிபிா் தொகுத்து வழங்கினாா்.
நிகழ்ச்சிககான ஏற்பாடுகளை உடற்பயிற்சி கழக ஒருங்கிணைப்பாளா் தமயந்தி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.