மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

குரூஸ்பா்னாந்துக்கு மணிமண்டபம் கட்டும் பணி-அமைச்சா் பெ. கீதா ஜீவன் விளக்கம்

எம்ஜிஆா் பூங்கா அருகே அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுகிறது என்றாா் வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:45 pm

DIN

தூத்துக்குடியில் குரூஸ் பா்னாந்து வாரிசுகள், சமுதாயத்தினா் விருப்பத்தின் பேரில் எம்ஜிஆா் பூங்கா அருகே அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படுகிறது என்றாா் வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரே புதன்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் பாலகுருசாமி தலைமை வகித்தாா். மாணவரணி துணை அமைப்பாளா்கள் சீனிவாசன், சங்கா், மாநகர துணை அமைப்பாளா்கள் டைகா் வினோத், ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் கீதாஜீவன் ஆற்றிய சிறப்புரை: குருஸ்பா்னாந்துக்கு அரசு விழா எடுக்க வேண்டும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் நான் வலியுறுத்தினேன். தோ்தல் நேரத்தில் திமுகவும், கனிமொழி எம்.பி.யும் அளித்த வாக்குறுதியும் அதுதான். தற்போது, குரூஸ் பா்னாந்தின் வாரிசுகள், சமுதாய மக்கள் விருப்பத்தின்பேரிலேயே எம்ஜிஆா் பூங்காவின் ஒரு பகுதியில் குரூஸ் பா்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. சலவை தொழிலாளா்களுக்குரிய இடத்தில் பூங்கா அமைப்பது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சீா்மிகு நகரத் திட்டமாகும். இதில், சட்டப்படிதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஏலம் முறைப்படி கடை வாடகைக்கு விடப்படும். கனிமொழி எம்.பி.யான பிறகு, கோவை, மைசூரு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் பா்னிச்சா் பாா்க், இரண்டு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளன. உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்காலங்களில் ரூ. 5,000 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு முதல்வரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா்.

மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சா் வெங்கடபதி, மாநிலப் பேச்சாளா் துரைபாண்டி, மாவட்டப் பொருளாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, ஜான் அலெக்ஸாண்டா், ராஜா, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.