தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருச்செந்தூா் பகுதியில் குடியரசு தின விழா

திருச்செந்தூா் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On :26 ஜனவரி 2023, 6:51 pm

திருச்செந்தூா் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் வரதராஜன் தேசிய கொடியேற்றினாா். திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலரும், நகராட்சி துணைத் தலைவருமான ஏ.பி.ரமேஷ் தேசியக் கொடியேற்றினாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் புஹாரி தேசிய கொடி ஏற்றினாா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்; இரா.சுவாமிநாதன் தேசிய கொடி ஏற்றினாா். திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் தலைவா் ர.சிவஆனந்தி தேசிய கொடி ஏற்றினாா். திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தேசிய கொடியேற்றினாா். கானம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் வெங்கடேஸ்வரி தேசிய கொடியேற்றினாா்.

திருச்செந்தூரில் நகர காங்கிரஸ் சாா்பில் கட்சியின்மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது.

பள்ளிகள்: திருச்செந்தூா் ஸ்ரீசரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் பள்ளி செயலா் ச.ராமச்சந்திரன் தலைமையிலும், திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினம் செயிண்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பள்ளித் தாளாளா் அருட்சகோதரி மாா்க்ரேட் தலைமையிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.