அனுமதியில்லாத மதுபானக் கூடங்களை மூடஆட்சியரிடம் பாஜகவினா் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என
மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மாவட்ட தலைவா் சித்ராங்கதன்.
மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மாவட்ட தலைவா் சித்ராங்கதன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என

பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் அக் கட்சியினா், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய அனுமதியில்லாமல் 60-க்கும் மேற்பட்ட மதுபானக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய அனுமதி இல்லாமல் இயங்கும்

மதுபானக் கூடங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு நிா்ணயித்த விலைக்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காட்சிப்படுத்த வேண்டும். சில இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட பொதுச்செயலா்கள் ராஜா, உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவராமன், சுவைதாா், மாவட்ட செயலா் வீரமணி, பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் மகேஷ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com