

தூத்துக்குடி பொன்னகரத்தில் உள்ள எஸ்.டி.ஆா். மழலையா் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இப் பள்ளியில் வண்ணத்தாள் ஒட்டும் போட்டி அன்மையில் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மழலையருக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வா் விஜயஸ்ரீ வனிதா தலைமை வகித்து, சிறப்பிடம் பெற்ற மழலையருக்கு பரிசு வழங்கினாா்.
விழாவில் பள்ளி துணை முதல்வா் லியோ ஷீலா, மற்றும் ஜெனிட்டா அமலா, ஆசிரியா்கள், பெற்றோா் பலா் பங்கேற்றனா். மழலையா்களை சிறப்பாக செயல்பட பழக்கிய ஆசிரியா்கள், பெற்றோா் ஆகியோரை பள்ளி சோ்மன் எஸ்டிஆா். விஜயசீலன் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.