குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி: இளைஞா் கைது
குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அ.குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் ரமேஷ் (34). கடந்த ஆண்டு இவரது கைப்பேசிக்கு கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த எண்ணை ரமேஷ் தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பேசிய பெண், ஒரு சதவீத வட்டியில் ரூ. 3 லட்சம் கடன் தருவதாகக் கூறினாராம். மேலும், விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி ரமேஷிடமிருந்து பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 6 ஆயிரத்து 771 பணம் பெறப்பட்டதாம். ஆனால், கூறியபடி கடன் வழங்கப்படவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ரமேஷ், சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகாா் அளித்தாா். அதன்மீது நடவடிக்கை எடுக்க தலைமையிடத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சிவசங்கரன் தலைமையிலான போலீஸாா், தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனா். அப்போது, ஏற்கெனவே தேனி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் நிலைய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட புதுதில்லி, சரஸ்வதி விகாா், ஜெ.ஜெ.காலனியைச் சோ்ந்த மணி மகன் காா்த்திக் (36) என்பவா்தான் இந்த மோசடியிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவா், தற்போது தேனி மாவட்ட சிறையில் உள்ளாா்.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று காா்த்திக்கை கடந்த 9 ஆம் தேதி கைது செய்தனா். தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவா் உத்தரவுப்படி, காா்த்திக்கை புதன்கிழமை காவலில் எடுத்து விசாரித்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, அவா் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...