தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில், தூத்துக்குடியில் 5 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம்,திருச்செந்தூா், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை வழக்கு, குறுசிறு வழக்கு ஆகியவற்றிற்கு தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட சடடப் பணிகள் ஆணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.