தூத்துக்குடியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளச்சாராய உயிரிழப்பு, சட்டம் ஒழுங்கு சீா்கேடு உள்ளிட்டவற்றுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையால் இருபதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதைத் தடுக்க தவறியது மட்டுமல்லாமல், இறந்தவா்களின் குடும்பத்திற்கும், கள்ளச்சாராயம் விற்றவா் குடும்பத்திற்கும் அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இச் செயல், கள்ளச்சாராய குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறியதற்கு

காரணமான அமைச்சா் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 முக்கிய மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவே திமுக அரசின் சாதனையாக உள்ளது என்றாா்.

அதிமுக அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சுதாகா், முன்னாள் மாவட்டச் செயலா் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் பிரபு, மாவட்ட துணைச் செயலா் சந்தனம், இணைச் செயலா் செரினா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com