எட்டயபுரத்தில் தமிழறிஞர் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா

சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 381 வது ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று எட்டயபுரத்தில் நடைபெற்றது.
அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி. கீதாஜீவன், ஆட்சியர் உள்ளிட்டோர்.
அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி. கீதாஜீவன், ஆட்சியர் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 381 வது ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று எட்டயபுரத்தில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, உமறுப்புலவர் சங்க தலைவர் உ. காஜா மைதீன் ஆகியோர் உமறுப்புலவர் நினைவிடத்தில் மலர்போர்வை வைத்து மலர்கள் தூவி சிறப்பு துவா ஓதி மதநல்லிணக்க பிரார்த்தனை செய்தனர். 

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. உமறுப்புலவர் சங்க தலைவர் உ. காஜா மைதீனுக்கு அமைச்சர் பி. கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் உமறுப்புலவர் சங்க நிர்வாகிகள் இமாம் அகமது ஜலால், ரபியுள்ளா, ரோஜா மைதீன், நூலகர் முத்து இருளப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com