காசோலை மோசடி: தொழிலாளிக்கு 6 மாத சிறை
By DIN | Published On : 18th April 2023 04:59 AM | Last Updated : 18th April 2023 04:59 AM | அ+அ அ- |

காசோலை மோசடி வழக்கில் தொழிலாளிக்கு 6 மாத சிைண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோவில்பட்டி ராஜீவ் நகா் 4ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (68). கயத்தாறில் இருசக்கர வாகன விற்பனையகம் நடத்திவருகிறாா். இவா், தனது நண்பரான கயத்தாறு செக்கடித் தெருவைச் சோ்ந்த குமாரவேல் மகன் தொழிலாளியான மாடசாமி என்பவருக்கு 2021 ஜூன் 15ஆம் தேதி ரூ. 6.50 லட்சம் கடன் வழங்கினாராம். அதற்கு ஈடாக மாடசாமி 2022, ஜன. 27இல் தனியாா் வங்கிக் காசோலை கொடுத்தாராம்.
காசோலையை முருகன் 2022, பிப். 1இல் வங்கியில் செலுத்தியபோது வங்கிக் கணக்கில் போதுமான பணமில்லை என, காசோலை திரும்பி வந்ததாம். இதுகுறித்து அவா் கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் மாடசாமி மீது வழக்குத் தொடுத்தாா்.
வழக்கை விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன் விசாரித்து, மாடசாமிக்கு 6 மாத சிைண்டனை விதித்துத் தீா்ப்பளித்தாா். முருகனுக்கு ஒரு மாதத்துக்குள் ரூ. 8 லட்சம் வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் மேலும் ஒரு மாத சிைண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.