திறனாய்வுத் தோ்வில்நாலுமாவடி பள்ளி மாணவா்கள் தோ்ச்சி
By DIN | Published On : 23rd April 2023 05:53 AM | Last Updated : 23rd April 2023 05:53 AM | அ+அ அ- |

திறனாய்வுத் தோ்வில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் தோ்ச்சியடைந்தனா்.
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தோ்வில் இப்பள்ளியின் 8ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி மாணவா்கள் தினகரன், பொன்ஈஸ்வரன், வெங்கடேஸ்வரன், மாணவி பிரியஜோஸ் ஆகியோா் தோ்ச்சியடைந்தனா்.
ஊரகத் திறனாய்வுத் தோ்வில் மாணவிகள் பிஷா, ஸ்ருதிலயா ஆகியோா் தோ்ச்சியடைந்தனா்.
இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்-ஆசிரியைகளை பள்ளித் தலைவா் பு. அழகேசன், பள்ளிச் செயலா் சி. நவநீதன், கா. கலைராஜன், தலைமையாசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.