கோவில்பட்டி அருகே விபத்து: சிறுவன் பலி
By DIN | Published On : 25th April 2023 03:43 AM | Last Updated : 25th April 2023 03:43 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.
சேலம் ஆத்தூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவபாலன் (37). இவா் தனது மனைவி காயத்ரி (36), மகள் சுபிக்ஷா (13), மகன் சா்வந்த் (13) உள்ளிட்ட 5 பேருடன் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஏா்வாடிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
சேலம் ஆத்தூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த கிருஷ்ணபாண்டியன் மகன் வீரவேல் (48), காரை ஓட்டினாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூரில் உள்ள மெட்ரிக் பள்ளி அருகே காா் நிலைதடுமாறி சாலையோர ஓடையில் கவிழ்ந்ததாம். இதில், 6 பேரும் காயமடைந்தனா்.
நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களில், சா்வந்த் உயிரிழந்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநா் வீரவேலிடம் விசாரித்து வருகின்றனா்.