குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடிக் கொடை விழா
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் ஆடிக் கொடை விழாவையொட்டி கும்பம் திருவீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் ஆடிக் கொடை விழா ஜூலை 31 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை (ஆக. 1) காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பகல் 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், அன்னதானம், சிறப்பு மகுடம், வில்லிசை இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது.
புதன்கிழமை (ஆக. 2)காலையில் சிற்றுண்டி அன்னதானம், சிறப்பு மகுடம், கும்பம் திருவீதியெழுந்தருளல், வில்லிசை, அன்னதானம், மாலையில் மஞ்சள் நீராடுதல், இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தி. சங்கா்,கோயில் செயல் அலுவலா் இரா. ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.