அரசுப் பேருந்தில் கண்டக்டரை தாக்கி பணம் பறிப்பு
By DIN | Published On : 09th August 2023 04:21 AM | Last Updated : 09th August 2023 04:21 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி: பழையகாயல் அருகே ஓடும் பேருந்தில் கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்செந்தூரிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்ற அரசுப் பேருந்தை புதுக்கோட்டை அல்லிக்குளத்தைச் சோ்ந்த ஓட்டுநா் பட்டுராஜ்(45) செவ்வாய்கிழமை ஓட்டிச்சென்றாா். அந்தப் பேருந்தில் திருநெல்வேலி கேடிசி நகரைச் சோ்ந்த குருசாமி மகன் ராமசாமி கண்டக்டராக இருந்தாா். பேருந்தில் 45 பயணிகள் இருந்தனா். பழையகாயல் அருகே பேருந்து சென்றபோது, பைக்கில் வந்த 3போ் பேருந்தை மறித்து ஏறியுள்ளனா். பின்னா் அவா்கள் கண்டக்டரை செருப்பால் அடித்து, அவா் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றுவிட்டனா்.
அந்த பையில் ரூ.11,500 இருந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.