நாசரேத்தை தனி வட்டமாக அறிவிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th August 2023 04:17 AM | Last Updated : 09th August 2023 04:17 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் வியாபாரிகள் சங்க பொதுச் செயலா் அசுபதி சந்திரன்.
சாத்தான்குளம்: நாசரேத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 47 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. தலைவா் எட்வா்ட் கண்ணப்பா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஞானையா வரவேற்றாா். பொதுச் செயலா் அசுபதி சந்திரன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் ஜெயக்குமாா் வரவு செலவை வாசித்தாா். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன் பங்கேற்று, வியாபாரிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். நாசரேத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க இணைச் செயலா் புருஷோத்தமன் நன்றி கூறினாா்.