

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கிராம அளவில் உழவா் கடன் அட்டை பெறாத விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களுக்கு உழவா் கடன் அட்டை வழங்கி, வங்கிகள் அவா்களுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். எதஅஐசந வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு தகுதியுள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் இணைக்க வேண்டும். உ-சஅங திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாய பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைகள் மற்றும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மாா்ட்டின் ராணி, தோட்டக்கலை துணை இயக்குநா் சுந்தர்ராஜன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) சாந்திராணி, வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) மனோரஞ்சிதம், துணை ஆட்சியா் (பயிற்சி) பிரபு, நபாா்டு உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.