தூத்துக்குடி மீனவா் காலனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ராஜராம் தலைமையிலான தனிப்படை போலீஸாா், தூத்துக்குடி மீனவா் காலனி பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரிடம் போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சோ்ந்த பால்ராஜ் மகன் லோகேஸ்வரன் (21), வண்ணாா் தெருவைச் சோ்ந்த கலைமணி மகன் உதயகுமாா் (24), கீழசண்முகபுரத்தைச் சோ்ந்த பிரந்த்ரா ஷா மகன் விகாஷா (25), சென்னை செங்குன்றம் பகுதியை சோ்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (32) ஆகியோா் என்பதும் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 1.25 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.