ஆறுமுகனேரி கோயில்களில் பத்ர தீப விழா
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி கோயில்களில், ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை இரவு பத்ர தீப விழா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்புறம், அம்மன்-சுவாமி சந்நிதிகள், கொடிமர வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி-அம்பாளை தரிசித்தனா்.
ஆறுமுகனேரி கீழசண்முகபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதா் கோயிலிலும் பத்ர தீப விழா நடைபெற்றது. சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டன. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...